அமெரிக்காவின் மெக்சிகனில் உள்ள ஒரு தம்பதி 14 ஆண் குழந்தைகளுக்குப் பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மெக்சிகனில் வசித்து வரும் தம்பதி கட்டேரி மற்றும் ஜே ஸ்வாண்ட். பெண் குழந்தையின் மீது பேரன்பு கொண்ட இந்தத்தம்பதி, தங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென்பதற்காக 14 ஆண் குழந்தைகளுக்குப் பிறகு தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். 45 வயதான பெண்மணி கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 3 கிலோ 40 கிராம் எடை இருந்த இந்தப் பெண் குழந்தைக்கு மேகி ஜெய்னே என்று பெயர் வைத்துள்ளனர். இது குறித்து மேகியின் பெற்றோர் கூறும் போது “ நிறைய வழிகளில், நிறைய காரணங்களுக்காக இந்த வருடம் மறக்கமுடியாத ஆண்டாக மாறியிருக்கிறது. ஆனால் மேகி எங்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத பரிசு. என்றனர்.
http://dlvr.it/RlH987
Monday 9 November 2020
Home »
» பெண் குழந்தை மீது ஆசை... 14 ஆண் குழந்தைகளுக்கு பின் வீட்டுக்கு வந்த தேவதை.!