விருக்கிறாகேரள மாநிலத்தில் பிராமணர் அல்லாத மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை அர்ச்சகராக நியமிக்க 2017-ம் ஆண்டு அம்மாநில சி.பி.எம் அரசு முடிவு செய்தது. `கேரள தேவசம்போர்டு கட்டுப்பாட்டிலுள்ள 1,248 கோயில்களிலும் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக்கலாம்’ என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தந்திரிகள் உள்ளிட்டவர்கள் நேர்காணல் நடத்தி, கடந்த 2017-ம் ஆண்டு பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகராக நியமித்தது கேரளத்தின் திருவிதாங்கூர் தேவசம்போர்டு.
அதில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஆறு பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பட்டியலின மற்றும் பழங்குடியினர் 19 பேரை பகுதி நேர அர்ச்சகர்களா நியமிக்கவிருப்பதாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்படவிருக்கிறார்.அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
இதுகுறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,``கேரள தேவசம்போர்டு மீண்டும் சரித்திரம் படைத்திருக்கிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டில் பகுதி நேர அர்ச்சகர் பதவிக்கு பட்டியலின, பழங்குடியினர் 19 பேருக்கு பணி நியமனக் கடிதம் விரைவில் வழங்கப்படும். பட்டியலினத்தைச் சேர்ந்த 18 பேருக்கும், பழங்குடியினர் ஒருவருக்கும் சிறப்பு ஆள்சேர்ப்பு மூலம் பணி ஆணை வழங்கப்படும். கேரள வரலாற்றில் முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்படவிருக்கிறார்.
Also Read: `உங்க அரசியலை வெளியே வெச்சிக்கோங்க!' - ஆர் .எஸ்.எஸ்ஸுக்கு எதிராக தேவசம் போர்டு அமைச்சர் ஆவேசம்
23.8.2017-ல் நடைமுறைக்கு வந்த ரேங்க் லிஸ்ட்டின் அடிப்படையில் 310 பேர் திருவிதாங்கூர் தேவசம் போர்டு பகுதிநேர அர்ச்சகர் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அன்றைய தேர்வுக்கு பழங்குடி மற்றும் பட்டியலின தேர்வர்களிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை. அந்தப் பற்றாக்குறையைப் பூர்த்திசெய்யும்விதமாக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரேங்க் லிஸ்ட் நேற்று (5.11.2020) வெளியிடப்பட்டது. பழங்குடியினருக்காக நான்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்திருந்தது.அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
எல்.டி.எஃப் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆள் சேர்க்கும் வாரியம் மறுசீரமைக்கப்பட்டு, திருவிதாங்கூர் தேவசம்போர்டில் பல்வேறு பதவிகளுக்காக 474 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதுபோல, கொச்சி தேவசம்போர்டில் 325 பணியாளர்களும், மலபார் தேவசம்போர்டில் 16 பணியாளர்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். மூன்று தேவசம் போர்டுகளிலும் மொத்தம் 815 பணியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/Rl9St7
Saturday 7 November 2020
Home »
» `கேரள வரலாற்றில் முதன்முறை... பழங்குடியின அர்ச்சகர்!’ - தேவசம் போர்டு அமைச்சர் பெருமிதம்