விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. நாடு முழுவதிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஏஎல்பி எனப்படும் திறந்தவெளி அனுமதி எனும் நடைமுறை 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு நிலவும் சூழலில் ஓ.ஏ.எல்.பியின் ஐந்தாவது சுற்றுச்சூழல் ஏலம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது தமிழகத்தின் காவிரி படுகையில் அமைந்துள்ள நிலப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் 7 ஒப்பந்தமும், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் 4 ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.
http://dlvr.it/RlxVlG
Wednesday 18 November 2020
Home »
» தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மீண்டும் ஒப்பந்தம்