அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன் என்று, ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜேர் பைடன், நாட்டை வழிநடத்த தன்னை தேர்ந்தெடுத்ததற்காக பெருமைப்படுவதாகவும், தன் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நமக்கு முன்னால் உள்ள பணிகள் கடினமாக இருக்கும் சூழலில், தனக்கு வாக்களித்திருந்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அனைத்து அமெரிக்க மக்களுக்கும் அதிபராக இருப்பேன் என்று உறுதியளிப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். முன்னதாக, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவை விரட்டுவதற்கும் பொருளாதாரத்தை மீட்கவும் அமெரிக்க மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். அழுத்தம் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்தார்.
http://dlvr.it/RlDMmk
Sunday 8 November 2020
Home »
» "அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன்" -ஜோ பைடன்